சினிமா

வெளியாகியது ‘சுல்தான்’ படத்தின் டீசர்! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த ரெமோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தினை நடிகர் கார்த்தியை வைத்து “சுல்தான்” என்ற புதிய படத்தினை இயக்கி வருகிறார்.

இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அவரை தொடர்ந்து யோகி பாபு, பொன்னப்பாலம் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்தியின் 19 வது படமாக உருவாகும் இப்படத்தினை எஸ்.ஆர் பிரபு தயாரிக்கிறார்.  

இதன் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், மீண்டும் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு பணிகள் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில், இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ALSO READ  தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல்; விஜயபாஸ்கர் விளக்கம் 

அதனையடுத்து அண்மையில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சுல்தான் படத்தின் டீசர் இன்று (1.2.2021) வெளியாகும் என கூறியிருந்தார். அதன்படி தற்போது படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. விறுவிறுப்பும் ஆக்க்ஷன் கலந்த இந்த டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெப் தொடர் சர்ச்சை : மீண்டும் இணைய தொடரில் நடிக்கும் பிரபல நடிகை…!

naveen santhakumar

காதல் திருமணம் குறித்து கயல் ஆனந்தி விளக்கம்..!

News Editor

நீதிமன்ற உத்தரவால் இந்தியன் 2 பட பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது !

News Editor