சினிமா

நடிகர் கார்த்திக்கு தீவிர சிகிச்சை…மருத்துவமனையில் அனுமதி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாரதிராஜா இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த கார்த்திக், தற்போது மற்ற நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

Actor Karthik Hospitalized! | NETTV4U

இந்நிலையில் நடிகர் கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Actor Karthik: 'సీతాకోకచిలక' హీరో కార్తీక్‌కు తీవ్ర గాయాలు.. వ్యాయామం  చేస్తున్న సమయంలో - Senior actor Karthik slips while doing workouts Injured

அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால், எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.நடிகர் கார்த்திக் தற்போது தீ இவன், அந்தகன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  பிரபல நடிகர் முரளி திடீர் மறைவு…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ் சினிமாவில் கலக்கிய சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்.. யார், என்ன படங்கள்.?

naveen santhakumar

நெற்றிக்கண் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor

இந்தியன் 2 படத்தில் இப்படித்தான் நடிக்கிறேன் : உண்மையை சொன்ன காஜல்

Admin