சினிமா

மாதவனின் “மாறா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை  அறிவித்தது : அமேசான் ப்ரைம் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான் , பார்வதி மேனன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ‘சார்லி’. இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை  பெற்றது. ஆகையால் சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கை பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா இணைந்து, பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரித்துள்ளனர்.


‘சார்லி’ படத்தை இயக்குநர் திலீப் குமார் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரையும் வைத்து தமிழில் இயக்கிருக்கிறார்.  இவர்களுடன் ஷிவதா, மௌலி, அலெக்ஸாண்டர் பாபு, எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், கிஷோர் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு ‘மாறா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் படக்குழு ‘மாறா’ படத்தினை  நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட திட்டமிட்டது. அதன்படி, அமேசான் ப்ரைம் நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. படம் டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகும் எனக் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தது அமேசான் நிறுவனம். 

ALSO READ  ஷீரடியில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்

இதனையடுத்து தற்போது ‘மாறா’ திரைப்படத்தின் வெளியீட்டில் தேதியில்  மாற்றம் செய்த அமேசான் நிறுவனம் படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்தகவல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் பகிர்ந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இணையத்தில் கவனம் ஈர்க்கும் ‘செல்லப்பிள்ளை’ படத்தின் டீஸர்  !

News Editor

‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வினுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் :

Shobika

யுவன் இசையில் மிரட்டும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் !

News Editor