சினிமா

நடிகர் சத்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாட்டை உலுக்கியெடுத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது திரைப்பிரபலங்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சில தினங்களுக்கு முன்பு பூரண நலம் பெற்று வீடு திரும்பினார். அதற்கு முன்னதாக கடந்த மாதம் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ALSO READ  உங்கள் பயம் புரிகிறது; உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை; நடிகை குஷ்பூ கருத்து..!

தற்போது நடிகர்கள் அருண் விஜய், டி.பி.கஜேந்திரன், நடிகை மீனா உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு நடிகர் சத்யராஜ் சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சத்யராஜுக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், திரையுலகினர் பலரும் அவர் பூரண நலம் பெற வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது பண மோசடி புகார் :

Shobika

‘மாஸ்டர் பட டீசர்’ யூடியூபில் புதிய சாதனை 

News Editor

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

naveen santhakumar