சினிமா

உள்ளே வந்தார் உதயநிதி – சொன்ன தேதியில் வெளியானது மாநாடு – முழு விபரம் உள்ளே

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

பல்வேறு பிரச்சனைகள், தடைகளை தாண்டி வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த மாநாடு திரைப்படம் இன்று காலை 8 மணி முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கடைசி வரை நீடித்த சிக்கல் தீர்ந்தது.. நாளை திட்டமிட்டபடி மாநாடு ரிலீஸ்..  குஷியில் சிம்பு ரசிகர்கள்..!!! - Hello Cini News

முன்னதாக மாநாடு திரைப்படம் இன்று காலை 5 மணிக்கு ஸ்பெஷல் ஷோவாக திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கும் பிரச்சனை ஏற்பட்டதால் காலை 8 மணி முதல் காட்சிகள் தொடங்கி இருக்கிறது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி உள்ளது மாநாடு திரைப்படம்.

படம் தொடங்கியது முதலே கடும் பிரச்சனைகளை சந்தித்தது மாநாடு. ஒருகட்டத்தில் படம் கைவிடப்படும் நிலைக்கு போனது. பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு ப்ரயத்தனங்களுக்கு பிறகு முடிவடைந்தது மாநாடு.

முதலில் தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படத்துடன் மாநாடு வெளியிடப்பட திட்டமிடப்பட்டது. ஆனால் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் அண்ணாத்த திரைப் படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை பெற்றது. அதன்பிறகும் தீபாவளிக்கு மாநாடு ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறிவந்தார்.

இந்நிலையில், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்பட பிரச்சினையை கிளப்பினார் அதன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இதனால் மாநாடு படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு தீபாவளிக்கு வெளியாகாமல் போனது.

ALSO READ  சித்தார்த் சுக்லாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஜான் சீனா.

பிறகு மாநாடு திரைப்படம் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திரையரங்கிற்கு செல்வோர் 2 டேஸ் தடுப்பூசி போடுவது கட்டாயம் என்று தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு, படக்குழுவினரை கண்கலங்க வைத்தது. மாநாடு நிகழ்ச்சியில் திடீரென சிலம்பரசன் உடைந்து அழுதே விட்டார்.

பண விவகாரம்

இதை தொடர்ந்து, திடீர் என மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மனவலியோடு படம் ரிலீஸ் ஆக இருந்த சில மணி நேரத்தில், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்தில் மீண்டும், பட பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டு நாளை படம் ரிலீஸ் அறிவிப்பும்வெளியானது .

இந்நிலையில் தான் இந்த பட பிரச்சனை தீர யார் காரணம் என்பது, சிம்புவின் நண்பர் மற்றும் நடிகருமான மகத் ராகவேந்திரா பதிவு மூலம் தெரியவந்துள்ளது.

அது வேறு யாருமல்ல சிம்புவுக்கு எந்த பிரச்சனை வந்தாலும், முதலில் கவசமாக இருந்து காப்பாற்றும் அவரது பெற்றோர் டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் தான் கடைசி நேரத்தில் படம் ரிலீஸ் பிரச்சனையில் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத்துள்ளனர். இவர்கள் சுமார் 3 கோடி ரூபாயை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ  "ஏன் குடுப்பதினார் வீட்டு முன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை"; அறிக்கை வெளியிட்ட சிம்பு..!

அதுமட்டுமல்லாமல் மாநாடு பட தயாரிப்பு குழுவுக்கு பைனான்சியர் மதுரை அன்பு செழியன் 10 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார். மாநாடு திரைப்படத்தை கலைஞர் டிவிக்கு கேட்டுப் பெற்று அதற்கு பதிலாக ஆறு கோடி ரூபாய் பணத்தை உதயநிதி ஸ்டாலின் தலையீட்டின் பேரில் வழங்கியிருக்கிறார்கள்.

சிலம்பரசன் தற்போது நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 3 கோடி ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார். இவ்வாறு அனைத்து கடன்களும் செட்டில் செய்யப்பட்டு தான் படம் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

பொதுவாகவே சிம்புவின் படங்கள் என்றால், பிரச்சனைகளை சந்திக்காமல் வெளியாவது தான் அதிசயமாக பார்க்கப்படுகிறது. இதுபோல் ஏற்கனவே வெளியான படங்கள் கூட சில பிரச்சனைகளை சந்தித்த பின்னரே வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குழந்தைகளின் நலன் குறித்து பேசிய த்ரிஷா:

naveen santhakumar

எங்களுக்கு கொரோனாவா??- நயன்தாரா, விக்னேஷ் சிவன் விளக்கம்… 

naveen santhakumar

பாண்டியன் ஸ்டோர் சீரியல் புகழ் ‘முல்லை’ தூக்கிட்டு தற்கொலை

naveen santhakumar