சினிமா

‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். அந்தாதூன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450 வசூல் செய்தது.

அதனை தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.  இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான மூன்று தேசிய விருதுகளை வாங்கியது. சிறந்த நடிப்பிற்க்காக ஆயுஷ்மான் குரானாவுக்கும் ,சிறந்த இந்தி படம்  மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதினை வாங்கியது.அந்தாதூன்’  படத்தின் தமிழ் ரீமேக்கை ‘பொன்மகள் வந்தால்’ படத்தின் இயக்குநர் ஜே ஜே ஃப்ரெட்ரிக் இயக்கிவருகிறார். 

இதில் நடிகர் பிரசாந்த், கே.எஸ்.ரவிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர்கள் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு அந்தகன் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது. 


Share
ALSO READ  போர்வீரன் கதாபாத்திரத்தில் அர்ஜுன்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல சீரியல் நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை

Admin

ஃப்ரீயாவே நடிச்சுத் தரேன்- யோகிபாபு:

naveen santhakumar

வலிமைன்றது அடுத்தவன காப்பாத்ததான்; அழிக்க இல்ல…கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

naveen santhakumar