சினிமா

வயிற்றில் சிசுவுடன் சிரசாசனம் செய்யும் அனுஷ்கா ஷர்மா…..உதவும் கணவர் கோஹ்லி…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கர்ப்பகாலத்தில் கணவர் கோஹ்லி உதவியுடன் நடிகை அனுஷ்கா ஷர்மா ‘சிரசாசனம்’ செய்யும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி(31) இவரது மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா.இவர்களுக்கு  ஜனவரியில் குழந்தை பிறக்கவுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி, முதல் டெஸ்ட் முடிந்த பின் இந்தியா திரும்புகிறார்.இதனிடையே, கர்ப்ப காலத்தில் அனுஷ்கா ஷர்மா தலைகீழாக நின்று ‘சிரசாசனம்’ செய்ய, அவருக்கு கோஹ்லி உதவும் போட்டோ சமூக வலைதளத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அனுஷ்கா ஷர்மா அதில், ”எனது வாழ்க்கையில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. தலைகீழாக நின்று, கால்கள் மேலே வைத்து செய்யும் ‘சிரசாசனம்’ கடினமானது. இதனை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன். தற்போது கர்ப்ப காலத்தில் டாக்டரின் ஆலோசனைப்படி செய்கிறேன். முன்பு சுவற்றின் உதவியால் செய்வேன். இப்போது கூடுதல் பாதுகாப்பிற்காக கணவர் கோஹ்லி உதவுகிறார். எனது யோகா ஆசிரியர் காணொளி மூலம் பயிற்சிகளை மேற்பார்வையிட்டார். கர்ப்ப காலத்திலும் யோகா பயிற்சிகளை தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.


Share
ALSO READ  "பா வேந்தன்" எஸ்.பி.பி.யின் 75-வது பிறந்தநாள்…! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல பாலிவுட் நடிகர் மரணம் !

News Editor

லீக்கான காட்சிகளை ஷேர் செய்ய வேண்டாம்; மாளவிகா மோகன் வேண்டுகோள் !

News Editor

அதர்வாவின் சகோதரர் கதாநாயகனாக அறிமுகம் !

News Editor