சினிமா

பண்டைய கிரேக்கர் தோற்றத்தில் தனுஷ் – வைரலாகும் பிறந்தநாள் காமன் டிபி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தனுஷ் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் காமன் டிபி வெளியிட்டிருக்கிறார்கள். இதனை அவரது அண்ணன் இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டிருக்கிறார். வரலாற்று நாயகன் தோற்றத்தில் இருந்து இந்த டிபியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் தனுஷ். இதுவரை 4 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். தற்போது, கார்த்திக் நரேனின் ‘தனுஷ்43’ படத்தில் நடித்துவரும் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, இயக்குநர்கள் ராம்குமார், சேகர் கம்முலா இயக்கங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் இன்று தனது 38 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனுஷின் பிறந்தநாளையொட்டி காமன் டிபி வெளியிடப்பட்டுள்ளது.

ALSO READ  தனுஷின் முந்தைய படங்களின் சாதனையை முறியடித்த "கர்ணன்"..!

பார்ப்பதற்கு பதக்கம் போல வடிவமைத்திருக்கும் காமன் டிபியில் தனுஷ் வாங்கிய விருதுகளும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த காமன் டிபியை ‘ஆயிரத்தில் ஒருவன் கெட்டப்பா? ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால், ஒலிம்பிக் பதக்க கெட்டப்பா? என்றெல்லாம் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சாத்தான்குளம் சிறை மரணம்: நடிகர் ஜெயம் ரவி-ன் காட்டமான ட்வீட்…. 

naveen santhakumar

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

“சூர்யா 40” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் !

News Editor