சினிமா

“அந்தகன்” படத்தில் இருந்து விலகிய பொன்மகள் வந்தால் இயக்குனர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். அந்தாதூன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450 வசூல் செய்தது. 

அதனை தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான மூன்று தேசிய விருதுகளை வாங்கியது. சிறந்த நடிப்பிற்க்காக ஆயுஷ்மான் குரானாவுக்கும் ,சிறந்த இந்தி படம்  மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதினை வாங்கியது.  படத்தின் தமிழ் ரீமேக்கை ‘பொன்மகள் வந்தால்’ படத்தின் இயக்குநர் ஜே ஜே ஃப்ரெட்ரிக் இயக்கிவருகிறார். 


அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த், கே.எஸ்.ரவிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர்கள் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு “அந்தகன்” என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. 

ALSO READ  வாடிவாசலுக்கு பிறகு வசந்தபாலனுடன் கைகோர்க்கும் சூர்யா !


இந்நிலையில் “அந்தகன்” படத்தின் இயக்குநர் ஜே ஜே ஃப்ரெட்ரிக் தற்போது படத்தில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அந்தகன் படத்தை நான் இயக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அந்தகன் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, விரைவில் எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல பாடகி நித்யஸ்ரீக்கு விபத்தில் தலையில் அடி:

naveen santhakumar

ஹன்சிகாவின் 50-வது படத்தின் மீதுள்ள வழக்கு தள்ளுபடி :

Shobika

கர்ணன் படத்திற்கு நடுக்கடலில் பேனர் வைத்த ரசிகர்கள் !

News Editor