சினிமா

” தெருக்குரல் அறிவு ஒரு ராக் ஸ்டார்” நடிகர் துல்கர் சல்மான் ட்வீட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இளம்பாடகர்கள் தீ மற்றும்  ‘தெருக்குரல்’ அறிவு குரலில் உருவாகியுள்ள ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. வெளியான 10 நாட்களில் 21 மில்லியன் பார்வையாளர்களால் கேட்டு ரசிக்கப்பட்டுள்ள இப்பாடலை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் உருவான இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 
ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இப்பாடலை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நேற்று இயக்குநர் செல்வராகவன் இப்பாடல் பாராட்டி ட்வீட் செய்திருந்த நிலையில் தற்போது நடிகர் துல்கர் சல்மானும் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

அதில், “கடந்த சில நாட்களாக இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் தற்போதும் கூட பாடலில் இருந்து புதுவிதமான ஒலிகளை உணர்கிறேன். ஹேட்ஸ் ஆஃப் சார், பாடகி தீயின் குரலும் ஸ்டைலும் மிக நன்றாக இருக்கிறது.  ‘தெருக்குரல்’ அறிவு ஒரு ராக் ஸ்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  "கர்ணன்" படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வனிதா விலகல்…நோ கமெண்ட்ஸ்….!!!

Shobika

தெலுங்கில் பிரபல நடிகரின் படத்தில் என்ட்ரி கொடுக்கும் ‘கர்ணன்’ பட நடிகை :

Shobika

“மகா” படத்தின் டீஸர் நாளை வெளியீடு :

Shobika