சினிமா

தெலுங்கில் பிரபல நடிகரின் படத்தில் என்ட்ரி கொடுக்கும் ‘கர்ணன்’ பட நடிகை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மலையாளத்தில் கடந்த 2016-ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

ALSO READ  'உங்களை நடிகர் என நினைத்தேன்' தனுஷ் குறித்து பிரபல பாலிவுட் இயக்குநர் கருத்து !
Malayalam actress Rajisha Vijayan excited to be part of Dhanush's Karnan: I  feel blessed - Movies News

இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதையடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது கார்த்தி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ரஜிஷா, அடுத்ததாக தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

Rajisha Vijayan announces her next in Tamil, to act opposite Karthi | Rajisha  Vijayan| Karthi| Karnan

அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் ‘ராமாராவ்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சரத் மாந்தவா என்பவர் இயக்க உள்ளார். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குட்டிக்கதைக்கே இந்த நிலைமைன்னா… படம் ரிலீசானா?

Admin

சிம்பு நடிக்கும் படத்தின் இயக்குநர் மாற்றம் ..!

News Editor

நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார் !

News Editor