சினிமா

72 குண்டுகள் முழங்க நடிகர் விவேக் உடல் தகனம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணியாளவில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். பின்னர் இவரின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ALSO READ  மாசி மாத பலன்கள்... எதையும் துணிச்சலுடன் செய்யும் மேஷ ராசிக்காரர்களே...

மறைந்த நடிகர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து சுமார் 4 மணியளவில் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து தொடங்கியது.  பின் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை

News Editor

ரிலீஸில் தள்ளிப்போன சிவகார்த்திகேயன் படம்; அதிருப்தியில் ரசிகர்கள்..!

News Editor

ஒரே படத்திற்கு இசையமைக்கும் 8 இசையமைப்பாளர்கள்

Admin