சினிமா

காவல்துறையைப் பெருமைப்படுத்தி 5 படங்கள் எடுத்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன்: இயக்குநர் ஹரி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சாத்தான்குளம் சிறை மரணம் தொடர்பாக இயக்குநர் ஹரி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

இந்த சிறை மரணம் தொடர்பாக தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இயக்குநர் ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையையில்:-

சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரே வழி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிக பட்ச தண்டனை வழங்குவதே.. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.

ALSO READ  பிக்பாஸ் தமிழ் சீசன் 5: புரமோ - கமலின் அட்டகாசமான புகைப்படங்கள்!

மேலும், காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன் என இயக்குநர் ஹரி மிகுந்த மன வருத்தத்துடன் இந்த அறிக்கையை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளார். 

இயக்குநர் ஹரியின் இந்த கண்டனம், சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ALSO READ  கடுமையான தண்டனை தேவை- வீர விளையாட்டு மீட்பு கழக மாநில தலைவர் ராஜேஷ் அறிக்கை....

காவல்துறையை போற்றும் வகையில் சாமி, சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, சாமி 2 (சாமி ஸ்கொயர்) என காவல்துறையை பெருமைப் படுத்தும் விதமாக விக்ரம் மற்றும் சூர்யாவை வைத்து 5 காப் ஸ்டோரி படங்களை இயக்கியவர் இயக்குநர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சனம்-தர்ஷன் வழக்கு….தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் :

naveen santhakumar

கதாநாயகனாக அவதாரமெடுக்கும் நடிகர் லிங்கேஷ்:

naveen santhakumar

இணையத்தில் வைரலாகும் மாஸ்டர் படத்தின் புதிய புகைப்படங்கள்..!

News Editor