லைஃப் ஸ்டைல்

நெருக்கடியான இடங்களில் ஈசியாக பார்க் செய்ய டொயோட்டாவின் புதிய டெக்னாலஜி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தற்பொழுது கார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவற்றை பார்க் செய்வது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் அத்தகையை குறையைப் போக்கும் வகையில் டொயோட்டா நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. 

பக்கவாட்டு இயக்கம் (Sideway Movement) மூலமாக கார்களை நெருக்கடியான இடங்களில் பார் செய்யக்கூடிய வகையில் கார் சக்கரங்களை தேவையான கோணங்களுக்கு திருப்ப செய்து பக்கவாட்டில் நகர்த்தும் தொழில்நுட்பத்திற்கான பேட்டன்ட்க்கு விண்ணப்பித்துள்ளது டொயோட்டா நிறுவனம். 

டொயோட்டா நிறுவனம் தொடர்ச்சியாக எதிர்காலத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களைக் கருத்தில்கொண்டு தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது தற்பொழுது டொயோட்டா நிறுவனம் தயாரிக்கும் வாகனங்களில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மின்மயமாக்கல் (Electrification) உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.

ALSO READ  இந்தியா முதல் உலக நாடுகள் வரை : பிரியாணி தான் !

தற்பொழுது டொயோட்டா அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தில் கார்களில் உள்ள நான்கு சக்கரங்களும் பக்கவாட்டில் திரும்பி நகரக் கூடிய வகையில் உள்ளது. ஒவ்வொரு சக்கரத்திலும் பொருத்தப்பட்டுள்ள மோட்டார்கள் மூலமாக ஒவ்வொரு சக்கரமும் 360 டிகிரி கோணத்தில் திரும்பக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மிக எளிமையான முறையில் இந்த தொழில்நுட்பத்தை விளக்க வேண்டுமானால் அலுவலங்களில் உள்ள சூழலும் நாற்காலிகள் பக்கவாட்டிலோ அல்லது வேறு திசைகளில் எவ்வாறு செல்கிறதோ அதே போலத்தான் இந்த காரின் சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  உலக அறிவுசார் சொத்துரிமை தினம்...

சமீபகாலமாக எலன் மஸ்க் எதிர்கால தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக பல்வேறு வகையான புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி வருகிறார். மேலும் கூகுள் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் தானியங்கி கார்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போட்டிகள் காரணமாக டொயோட்டா நிறுவனம் இத்தகைய முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதனையடுத்து தனது இந்த புதிய கண்டுபிடிப்பு தொடர்பாக அமெரிக்காவின் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை (United States Patent and Trademark Office) அலுவலகத்தில் காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்று….உலகிலேயே மிக விலையுயர்ந்த காய்கறி இதுதானாம்….

naveen santhakumar

ஒவ்வொன்றும் ஒருவிதம்…பளபளக்கும் பட்டு பாவாடைகள் பலவிதம்….

Shobika

ஆண்மையை அதிகரிக்கும் கொள்ளு…எப்படி சாப்பிடுவது?

Admin