சினிமா

‘பாகுபலி’ மற்றும் ‘கே.ஜி.எஃப்’ படக்குழுவினருடன் இணையும் சுருதிஹாசன் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘கே.ஜி.எஃப் 1’ படத்தின் தொடர்ச்சியாக வரும் ‘கே.ஜி.எஃப் 2’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இப்பட இயக்குனர் இயக்கும் அடுத்தப்படமான ‘சலார்’ படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பாகுபலி புகழ் பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ளார்.‘சலார்’ படத்தின் பூஜை அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ‘கே.ஜி.எஃப்’ நாயகன் யாஷ் கலந்து கொண்டார். இந்த மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது. பாகுபலி, கே.ஜி.எஃப் போலவே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ‘சலார்’ படம் வெளியிடப்படவுள்ளது.

ALSO READ  'மிஸ் இந்தியா' பட்டம் வென்ற தென்னகத்து பெண்; உலக அழகி போட்டிக்கு தேர்வு !

இந்நிலையில் படக்குழு தற்போது படத்தின் கதாநாயகி யார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ” இயக்குனர் பிரசாந்த் நீல் சலார் படத்தில் கதாநாயகியை சுருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

நடிகை சுருதிஹாசன் பிறந்தநாளான இன்று இத்தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது படக்குழு. இதை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

ALSO READ  'யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்ககூடாது'  டிராக்டர் பேரணி குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!

#bahubali #KGF #yash #prabhas #shurtihassan #tamilcinema #tamilmovie #tamilthisai #prasantneel #telugucinema


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மொத்த கல்கத்தாக்கும் காப்பு கட்டியாச்சு – வெளியானது ’அண்ணாத்த’ ட்ரைலர்!

naveen santhakumar

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor

காயத்திரி வெளியிட்ட நேட்சுரல் லுக் புகைப்படங்கள்

Admin