இந்தியா

டிராக்டர் பேரணி எதிரொலி; விவசாயிகளின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில்  இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து  பேச்ச வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன. 

அதனையடுத்து குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் டிராக்டர் பேரணி சென்றனர் விவசாயிகள். அதில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு டெல்லி செங்கோடையில் சீக்கியர்களின் புனித கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் டெல்லி காவல்துறை விவசாயிகள் நடத்திய  டிராக்டர் பேரணியில் வன்முறை நடந்ததற்கு விவசாயிகள் போராட்டத்தின் நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் மீறியதுதான் காரணம் என காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. 

மேலும் வன்முறை தொடர்பாக விவசாய அமைப்புகளின் 20 முக்கிய தலைவர்களுக்கு டெல்லி காவல்துறை  நிபந்தனைகளை மீறியது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அதற்கு மூன்று நாளில் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

ALSO READ  ட்வீட் செய்த ஷ்ரேயா கோஷல்; குவியும் வாழ்த்துக்கள் !

அதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம்  வழக்கு பதிவு செய்தவர்கள் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யவும் டெல்லி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீட் தேர்வில் மோசடி …. 35 லட்சத்திற்கு விற்கப்பட்ட வினாத்தாள்!!!….

Admin

Ставки на спорт онлайн букмекерская компания 1xBet ᐉ 1xbet1.co

Shobika

சுப்ரீம் கோர்ட்டின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு!

Shanthi