சினிமா

இரண்டு தேசிய விருதுகளை வென்ற “ஒத்த செருப்பு” திரைப்படம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆண்டுதோறும் இந்திய அரசு சார்பாக திரைத்துறையினரை அங்கீகரிக்கும் விதமாக தேசிய திரைப்பட விருதுகள் வழங்குவது வழக்கம். அந்தவகையில் தற்போது 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர், நடிகை, மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்  சினிமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, ஏன் இந்திய சினிமா ரசிகர்கள் கூட இதுவரை பார்த்திராத கதைக்களமாகவும், கதையாகவும் உருவாகி கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ‘ஒத்த செருப்பு’. இந்த படத்தினை  பார்த்திபன் இயக்கியும் நடித்தும் இருந்தார்.

இப்படம் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. ‘ஒத்த செருப்பு’ படத்தில்  ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து இருந்தார் பார்த்திபன். இவரது இந்த புதுவிதமான முயற்சிக்கு அணைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தனர். மேலும் இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளையும் வென்றது. 

ALSO READ  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம்- பிரதமர் மோடி அறிவிப்பு !

இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் சிறப்பு விருதையும்(ஸ்பெஷல் ஜூரி), சிறந்த ஒளிப்பதிவுக்காக (ரசூல் பூக்குட்டி) தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிப்ரவரியில் தொடங்கும் செல்வராகவன் திரைப்படம்!

News Editor

பிரசாந்த் படத்தை இயக்குகிறாரா மோகன் ராஜா?

Admin

சிரஞ்சீவி பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கணவருடன் வந்த காஜல் 

News Editor