இந்தியா

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம்- பிரதமர் மோடி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய்க்கு பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

அந்தவகையில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவித்துவரும் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான திட்டங்கள் மற்றும் உதவிகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அந்த வகையில் தமிழக முதல்வரும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகை அளிக்கப்படும் என்றும், இந்த ரூ. 5 லட்சம் வைப்புத்தொகை 18 வயதில் வட்டியுடன் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ALSO READ  1xBet 1хБет скачать на Андроид Приложение 1xbet Android apk бесплатн

இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பி.எம் கேர்ஸ் நிதி மூலம் குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயதை அடைந்ததும் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும். அவர்களுக்கு 23 வயது பூர்த்தியான பிறகு இந்த 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்லி – ஆசிட் வீச்சு சம்பவம்..

Shanthi

முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவேன் என்று கூறிய ‘பாபா’ கொரோனாவால் உயிரிழப்பு- முத்தம் பெற்றோருக்கும் கொரோனா… 

naveen santhakumar

எளிய மாணவர்களின் கல்விக்காக அமெரிக்காவிலிருந்து நீளும் உதவி கரங்கள்… 

naveen santhakumar