சினிமா

பிரபாஸ் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹைதராபாத்:-

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள 20வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு ‘ராதே ஷ்யாம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். 

இப்படத்தில் முரளி சர்மா, சச்சின் கேடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷினி, குணால் ராய் கபூர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் உள்ளனர். 

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் ஆங்கிலம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. 

ALSO READ  நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி !

‘ராதேஷ்யம்’ ஃபர்ஸ்ட் லுக் பின்னணியில் இத்தாலியின் முக்கியமான லேண்ட்மார்க்குகளான கொலோஸியம் (Colosseum), ரோமன் மன்றம் (Roman Forum) காட்டப்பட்டுள்ளன.

ALSO READ  மீண்டும் வெளியீட்டில் தள்ளிப்போகும் காட்டேரி படம்...!

இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது இப்படத்தை T-Series மற்றும் UV Creation பெயர்கின்றன. பிரபாஸ் கடைசியாக நடித்த ‘சாஹோ’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் படு தோல்வியைச் சந்தித்தது. அதேசமயம் பூஜா ஹெக்டே நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘அலா வைகுந்தபுரம்லோ’ பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது.

முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் பத்தாம் தேதி 10 மணிக்கு வெளியிடப்படும் என்பதை பிரபாஸ் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“தள்ளி போகாதே” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

News Editor

நடிகர் கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி?

Shanthi

நயன்தாராவின் மிரட்டலான ‘நெற்றிக்கண்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

Shobika