சினிமா

திடீரென திருமணம் செய்துகொண்ட சூர்யா பட நடிகை – திரையுலகினர் வாழ்த்து!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ் திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார், திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

നടി ലിജോമോൾ ജോസ് വിവാഹിതയായി | Actress Lijomol Jose Ties knot with Arun  celebrity wedding

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். கடந்த 2019 ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் சித்தார்த் மனைவியாக, ஜிவி பிரகாஷ் மனைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Lijomol-Jose | Tamil actors Wallpapers | Tamil Movie news | Tamil actress  Images - Maalaimalar

இதையடுத்து தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இதுதவிர மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

ALSO READ  ஒரே நேரத்தில் 108 முறை சூர்ய நமஸ்காரம் செய்து அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்… 

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் லிஜோமோல் ஜோஸ் திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கும் கேரளாவை சேர்ந்த அருண் ஆண்டனி என்பவருக்கு நேற்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை லிஜோமோல் ஜோஸுக்கு, ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராகவா லவ்ரன்ஸின் ‘ருத்ரன்’ படம் பூஜையுடன் இன்று துவக்கம் !

News Editor

ஊரடங்கிலும் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு செய்தி…

naveen santhakumar

சீரியலிலிருந்து விலகிய பிரபல நடிகை- அவருக்கு பதில் யார் ???

naveen santhakumar