ஜோதிடம்

ராமாயண டிவி சீரியல் நடிகர் மரணம் – பிரதமர் மோடி, முக்கிய பிரபலங்கள் இரங்கல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

1987-88 வரை டிடி நெஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல இந்தி டிவி சீரியல் நிகழ்ச்சியான ’ராமாயண்’ தொடரில் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரயும் கவர்ந்தவர் அரவிந்த் திரிவேதி.

ராவணன் கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், அவர் 1991 முதல் 1996 வரை எம்பியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், 82 வயதான அரவிந்த் திரிவேதி மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ  கடைகள் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை.....

முன்னதாக, பிரபல இந்தி திரைப்பட மற்றும் டிவி சீரியல் நடிகரான கணேஷ்யாம் நாயக் (77) கடந்த 3-ம் தேதி உயிரிழந்தார்.

RIP : तारक मेहता के नट्टू काका एक्टर घनश्याम नायक का निधन, सोमवार सुबह किया  जाएगा अंतिम संस्कार | Taarak mehta ka ooltah chashmah fame nattu kaka aka  actor ghanashyan nayak died

இந்நிலையில், அரவிந்த் திரிவேதி மற்றும் கணேஷ்யாம் நாய்க் ஆகிய இரண்டு நடிகர்களின் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கடந்த சில நாட்களில், தங்கள் திறமை மூலம் மக்களின் மனதை வென்ற இரண்டு திறமையான நடிகர்களை நாம் இழந்துள்ளோம். ’தரக் மஹ்டா கா அல்தோ கஷ்மா’ டிவி நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மூலம் கணேஷ்யாம் நாயக் நினைவுக்கொள்ளப்படுவார். அவர் மிகவும் கனிவும், தாழ்மையுடனும் இருந்தார்.

ALSO READ  இதுல இவ்ளோ சாஸ்திரம் இருக்கா????

நாம் அரவிந்த் திரிவேதியை இழந்துள்ளோம். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, அவர் பொதுச்சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

ராமாயண் தொடரில் நடித்ததற்காக அவர் பல தலைமுறை இந்தியர்களாலும் நினைவில் கொள்ளப்படுவார். இரு நடிகர்களின் குடும்பங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி’’ என பதிவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு- பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது

naveen santhakumar

மாசி மாத பலன்கள்…சவால்களை ஜெயிக்கும் கன்னி ராசிக்காரர்களே…

Admin

9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

naveen santhakumar