சினிமா

வெற்றிமாறன்-சூர்யா படத்தின் புதிய அறிவிப்பு வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரின்  நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சூரரைப் போற்று’. ஓடிடி தளத்தில் வெளியாகியது. அதனையடுத்து இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 நடித்து வருகிறார் சூர்யா. அண்மையில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ALSO READ  மியான்மரில் அத்துமீறும் ராணுவம்; உலகத் தலைவர்கள் கண்டனம்!

இப்படத்தைத் தொடர்ந்து, சூர்யா நடிக்க உள்ள படம் ‘வாடிவாசல்’. சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது வாடிவாசல் படம் குறித்து புதிய அப்டேட்டை ஜி.வி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘வாடிவாசல் படத்திற்கான இசைப் பணிகள் இன்று தொடங்கியுள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த பதிவை ஷேர் செய்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

ALSO READ  இந்திய சூப்பர் ஸ்டார்கள் இணைந்து வெளியிட்டுள்ள குறும்படம்...

#vadivaasal #Tamilcinema #Cinema #Cinemanews #cinemaupdate #Surya #Vettrimaran #GVprakash #TamilThisai

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விக்ரம் படத்தின் கதையில் மாற்றம் செய்த கமல் !

News Editor

தன் பெயர் கொண்ட கடைக்கு நேரில் விசிட் அடித்த “சோனு ஷூட்”

News Editor

“விஜய்” படத்தால் பாதிக்கும் சிலம்பரசன்…!

News Editor