சினிமா

குடும்பங்களை குதூகலப்படுத்த வருகிறது அசத்தல் கதையம்சம் கொண்ட “மிடில்கிளாஸ்”:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அனைவருமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். படங்களில் கூட வேகம், விறுவிறுப்பு என்ற சூழல் வந்தவுடன் குடும்ப பாங்கான படங்களின் வருகை என்பது குறைந்துவிட்டது என்று தான் சொல்ல முடியும். அதிலும் குடும்ப படங்களில் அதிகளவில் காமெடியை முன்னிலைப்படுத்தியது குறைந்தே விட்டது என்று கூறலாம். 

குடும்பங்களில் நடைபெறும் காமெடி,கலாட்டாக்களை கதைக்களமாகக் கொண்டு நம்மை மகிழ்விக்க ஒரு கலகலப்பான குடும்பக் கதையம்சம் கொண்ட படம் ஒன்று தயாராகவுள்ளது.

‘அறம்’ தொடங்கி சமீபத்திய ‘க/பெ ரணசிங்கம்’ வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கைகொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் தான்  இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார். அவருடன் இணைந்து ‘டோரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது. 

எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான இந்தக் கதை எழுதி, இயக்கவுள்ளார் கிஷோர் எம்.ராமலிங்கம். இவர் ‘களவாணி’ படத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்தது மட்டுமன்றி ‘இது வேதாளம் சொல்லும் கதை’ மற்றும் ‘பூமிகா’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

ALSO READ  பிரபல நடிகருடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் பார்வதி !

‘மிடில்கிளாஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. இதில் முனீஸ்காந்த், ‘கலக்கப் போவது யாரு’ ராமர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஆச்சரியமூட்டும் நடிகர்களின் பட்டியல் வெளியாகும் என்கிறது படக்குழு.

ALSO READ  விஜய்சேதுபதி படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, எடிட்டராக ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரு வாரத்திற்கு பிக்பாஸில் இவ்வளவு சம்பளமா.? பிரியங்காவை மிஞ்சிய இவர் – முழு விபரங்கள்!

naveen santhakumar

ஞானவேல்ராஜா மீதான வழக்கு தள்ளுபடி :

Shobika

“மரகத நாணயம்” இயக்குனர் படத்தில் நடிக்கும் அதர்வா !

News Editor