சினிமா

“இதை பண்ணாதீர்கள்” மாஸ்டர் படம் குறித்து அர்ஜுன் தாஸ் கருத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.  


அண்மையில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து படக்குழு மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. அதனையடுத்து மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில், 400 சட்ட விரோத இணைய தளங்கள் மற்றும் 29 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ALSO READ  மூன்று தேசிய விருது பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் வனிதா விஜயகுமார் !

 இந்நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக  வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இது திரையுலகினரை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இது குறித்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்,”கசிந்த எந்த ஒரு காட்சிகளையும் பகிர வேண்டாம் என்று மாஸ்டர் டீம் சார்பாக உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற எந்த வகையான விஷயத்தையும் நீங்கள் கண்டால், தயவுசெய்து அதை report@blockxpiracy.com என்ற இணையதளத்தில் புகார் அளியுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  உங்க தொல்லை தாங்க முடியல…கதறிய போலீஸ் அதிகாரி

#master #mastermovie #masterleaked #thalapathy #vijay #mastermovie #arjundas #tamilmovie #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறுகிறார்களா?????

naveen santhakumar

கோல்டன் குளோப் விருதுகள் 2020

Admin

டப்பிங் பணியை தொடங்கிய அருண் விஜய் !

News Editor