சினிமா

‘மாஸ்டர் படம் 1000 நபர்களின் கடின உழைப்பு’ அனிருத் ட்வீட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.  


அண்மையில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து படக்குழு மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. அதனையடுத்து மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில், 400 சட்ட விரோத இணைய தளங்கள் மற்றும் 29 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக  வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். 

ALSO READ  பாரபட்சமின்றி தடுப்பூசி வழங்க வேண்டும்; இந்திய வாலிபர் சங்கம் கோரிக்கை !

இது திரையுலகினரை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இது குறித்து மாஸ்டர் படத்தின்  இசையமைப்பாளர் அனிருத் ட்வீட் செய்துள்ளார். அதில் “இது 1000 நபர்களின் கடின உழைப்பு. தயவுசெய்து கசிந்த எந்த காட்சிகள் குறித்தும் உடனடியாக report@blockxpiracy.com என்ற இணையத்தளத்தில் புகார் அளிக்கவும்” என குறிப்பிட்டுள்ளார்.

#master #masterleaked #thalapathu #anirudh #lokeshkanagaraj #vijaysethupathi #tamilcinema #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தி சினிமாவில் அறிமுகமாகும் மஞ்சு வாரியர் !

News Editor

வாட்ச்மேன் to வாத்தியார்… நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள இன்ஸ்பிரேஷன் வீடியோ……

naveen santhakumar

‘சக்ரா’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்த படக்குழு!

News Editor