சினிமா

விஜய்யுடன் போட்டி போடும் சிம்பு..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு தமன் இசைமைத்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இந்த படத்தில் ஒரு மாத  காலகட்டத்தில் நடித்து முடித்துள்ளதால். அவரின் சினிமா வாழ்க்கையில் மிக குறுகிய காலகட்டத்தில் நடித்துள்ள படமாக இது பார்க்கப்படுகிறது.

அதனையடுத்து அண்மையில் இப்படத்தின் ஈஸ்வரன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. பின்னர் அந்த போஸ்டர் பல சர்ச்சைகளை கிளப்பியது.

அண்மையில் படத்தின் இசையமைப்பாளர் தமன்  தனது ட்விட்டர் பக்கத்தில் ஈஸ்வரன் படத்திற்கு இசையமைத்து முடித்துவிட்டதாகவும் மேலும் ஜனவரி 2 ஆம் தேதி படத்தின் இசை வெளியாகும் என ஆதாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரன் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பொங்கலுக்கு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ALSO READ  ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி திரைப்படம் ...!

ஏற்கனவே, மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  விஜயின் மாஸ்டர் படத்துடன் சிம்புவின்  ஈஸ்வரன் படம் நேரடியாக போட்டி போட்டுகொண்டு பொங்கலுக்கு வெளியாவதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பல முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளிய நடிகை ராஷ்மிகா மந்தனா :

Shobika

அனல் பறக்கும் கெட்டப்பில் மிரட்டும் யாஷ்..! வெளியாகியது கே.ஜி.எஃப் 2 டீசர்..! 

News Editor

12 வருடகால காத்திருப்பு  “தங்கம்” படத்தின் வெற்றியால் மனம் நெகிந்த சாந்தனு..!

News Editor