சினிமா

“மாமனிதன்” படம் அப்டேட் கொடுத்த இயக்குனர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனு ராமசாமி இயக்கத்தில்  நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன், தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் படத்தைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி சேர்ந்து உள்ளதால் மாமனிதன் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 


இதனை தொடர்ந்து இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, தயாரித்தும் உள்ளார்.இப்படத்தில் இளையராஜாவும்- யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்தே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் மாமனிதன் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தயாரிப்பு தரப்பிலிருந்து ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக படத்தின் ரிலீஸ் தடைபட்டுபோனது. 


இந்நிலையில் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி  ‘மாமனிதன்’ தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது. அதை, முறைப்படி யுவன்சங்கர்ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார். ஆகவே, ‘மாமனிதன்’ படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது. தலைப்பு பெற்றதால் முதல் பார்வை, பாடல் விரைவில் வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.

ALSO READ  ஸ்ரீ பிரியங்காவின் சட்டம் தன் கடமையை செய்யும் :

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிக்பாஸ் புகழ் ஆரவிற்கு இந்த நடிகையுடன் திருமணமாம்….அப்போ ஓவியா???????

naveen santhakumar

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு ! 

News Editor

யோகி பாபுக்கு கல்யாணமாம்! பொண்ணு யார் தெரியுமா ?

Admin