சினிமா

“VJS 46″படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் திரையுலகில் தன்னுடைய தனித்துவமான எதார்த்த நடிப்பால் முன்னணி நடிகராக வளர்ந்து வந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அண்மையில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மலையாளம் என மற்ற மொழிகளில் நடித்து வருகிறார். 

ALSO READ  'வேற லெவல் சகோ'அயலான் படத்தின் பாடல் வெளியீடு..!

இந்நிலையில் தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் இயக்குநர் பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். “VJS 46” என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கிராமத்து கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். இத்தகவலை பட தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

ALSO READ  'மது போதைக்கு அடிமை' ரசிகருக்கு பதிலடி கொடுத்த மாதவன்! 

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே நாளில் 500 கொலை மிரட்டல்; பரபரப்பை கிளப்பிய சித்தார்த் ட்வீட் ! 

News Editor

நடிகை தமன்னா மீது வழக்கு..!

naveen santhakumar

செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்தி நீக்கம்….. ஜீ தமிழின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

News Editor