இந்தியா

புயல் எச்சரிக்கை கூண்டு எதனடிப்படையில் ஏற்றப்படும்?????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை  :

1864-ல் கொல்கத்தா மற்றும் மச்சிலிபட்டினம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட புயல்களைத் தொடர்ந்து, அன்றைய பிரிக்கப்படாத இந்தியாவுக்கு சூறாவளி மற்றும் புயல் எச்சரிக்கை முறையை அமைக்க அன்றைய பிரிட்டன்  அரசாங்கம் முடிவு செய்தது. 

அதற்கு அடுத்த ஆண்டு, புயல் எச்சரிக்கை முறையைக் கொண்ட முதல் துறைமுகமாக கொல்கத்தா உருவானது. அன்று முதல் பொதுவாக புயல் காலங்களில் 1 முதல் 11 எண் வரையிலான புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். 

சில நாடுகள் கொடிகளை ஏற்றும், இந்தியா பகல் மற்றும் இரவு நேரங்களில் தனித்துவமான அடையாளங்களைப் பயன்படுத்துகிறது. பகல் நேரங்களில் சிலிண்டர்கள் மற்றும் கூம்பு வடிவ  மூங்கில்  கூண்டுகள் ஏற்றப்படும்.அதுவே இரவு நேரங்களில் சிவப்பு மற்றும் வெள்ளை விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். 

1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:-

1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், ஒரு குறைந்த அழுத்த பகுதி கடலில் வெகு தொலைவில் உருவாகி வருவதாகவும், மேற்பரப்பு காற்று 33 நாட் அதாவது  60 கி.மீ வேகத்தில் வீசலாம் என்பதை இது குறிக்கிறது. கடலில் புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம்.  இதனால் துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், ஆனால் சற்று அதிக பலத்த காற்று வீசும் என்றும் பொருள்.

2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:-

2ம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடலில்  புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக இந்த 2ம் எண் கூண்டு ஏற்றப்படுகிறது. 34-47 நாட் அதாவது  60-90 கி.மீ) வரை மேற்பரப்பு காற்றுடன் கடலில் ஒரு தாழ்வு உருவாகியுள்ளது.இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் கப்பல்கள் துறைமுகத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்.

ALSO READ  1xBet 1хБет скачать на Андроид Приложение 1xbet Android apk бесплатн

3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:-

3-ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பெய்யும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.  22-27 நாட்/ 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:-

4ம் எண் கூண்டு, துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்பதை குறிக்கும். கடலில் ஒரு ஆழ்ந்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று பொருள். மேற்பரப்பு காற்று சுமார் 28-33  நாட் / 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.3 மற்றும் 4 எச்சரிக்கை கூண்டு துறைமுகத்தில் உருவாகியுள்ள மோசமான வானிலை குறிக்கிறது.

5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:-

ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி இருப்பதை குறிப்பதோடு  துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். மேலும், மேற்பரப்பு காற்று 34-47 நாட்டுக்கள்/ 60-80 கி.மீ வேகத்தில் வீச கூடும்.

6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:- 

5ம் எச்சரிக்கை போன்றது, தான் ஆனால் ஒருவேளை புயல் வலதுபக்கமாக கரையைக் கடக்கும் போது, துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படுத்தப்படும் என்பதை குறிப்பது ஆறாம் எண் புயல் கூண்டு ஆகும்.

7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:-

7ம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

ALSO READ  இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்;ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு:

8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:-

8ம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், மிகுந்த அபாயம் என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம். 

5, 6 மற்றும் 7ம் எண் எச்சரிக்கைகள் துறைமுகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் குறிக்கின்றன.

‘மிகவும் ஆபத்து’ என்று பொருள், அதாவது புயல் இப்போது கடுமையான அல்லது மிகக் கடுமையான புயல்  துறைமுகத்தை இடதுபுறமாக கடக்கும் என்று அர்த்தம். மேற்பரப்பு காற்று 48 முதல் 63 நாட்டுக்கள்/ 90-120 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:-

9ம் எண் கூண்டுக்கு, ‘மிகவும் ஆபத்து’ எச்சரிக்கை புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். புயல் துறைமுகத்தை அதன் வலதுபுறமாக கரையை கடக்கும்.

10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:-

10ம் எண் கூண்டு ஏற்றப்படுமானால், அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கப்படுகிறது. காற்றின் வேகம் 64-119 நாட்டுக்கள் அதாவது மணிக்கு 120-220 கிமீ வேகத்தில் அல்லது  சூப்பர் சூறாவளி – 120 நாட்டுக்களுக்கு மேல் 220 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடும்.

11ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:-

11ம் எண் கூண்டு தான் உச்சபட்சமானது. இது எதற்கு ஏற்றப்படுகிறது என்றால் வானிலை மையத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாடு முழுவதும் பள்ளிகளை திறக்கலாம் -ICMR…!

naveen santhakumar

120 மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை படைத்த மாணவி

News Editor

ரபேல் போர் விமான ஒப்பந்தம் : 650 கோடி லஞ்சம் இடைத்தரகர் சுஷன் குப்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் புலனாய்வு நிறுவனம் மீடியாபார்ட் செய்தி வெளியீடு

News Editor