இந்தியா

மராத்தியை கட்டாய பாடமாக்க திட்டமிடும் மஹாராஷ்டிரா அரசு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை கட்டாய பாடமாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு 1 முதல் 7 வகுப்பு வரை மராத்தி மொழியை கட்டாய பாடமாக்க கொண்டு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான புதிய அரசு பதவியேற்றபின், தற்போது அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மராத்தியை கட்டாய பாடமாக்க முடிவு செய்துள்ளது.

ALSO READ  நவம்பர் 23-ம் தேதி முதல் மராட்டியத்தில் பள்ளிகள் செயல்பட அனுமதி:

இதுபற்றி அம்மாநில தொழிற்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறும் போது, 1 முதல் 10ம் வகுப்பு வரை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மராத்தியை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டம் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

மராட்டியத்தின் மாநில மொழியை அனைவரும் கண்டிப்பாக கற்றாக வேண்டும் என மற்றொரு அமைச்சரான சாகன் புஜ்பால் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1xBet 1хБет скачать на Андроид Приложение 1xbet Android apk бесплатн

Shobika

முதல் வகுப்பு படிக்கும் ராணா சர்வதேச மாடலிங் போட்டிக்கு தேர்வு

News Editor

2020 ஆண்டுக்கான பத்ம விபூஷன் பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

News Editor