இந்தியா

வானில் பறந்த விமானத்தில் தலைமை தேர்தல் அதிகாரியின் பணம் திருட்டு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரள மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருக்கும் டீக்காராம் மீனாவின் பணம் விமானத்தில் வைத்து காணாமல் போயுள்ளது.

கேரள மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் டீக்காராம் மீனா. இவர் சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளார்.அங்கு நிகழ்ச்சி முடிந்து திருவனந்தபுரம் வருவதற்காக ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் விமான பயணத்தின் போது அவரது பையில் வைத்திருந்த சுமார் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து உள்ளார்கள். பணம் காணாமல் போனதும் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார் டீக்காராம் மீனா.

ALSO READ  புதுச்சேரி மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

இதனையடுத்து காவல்துறை சார்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில், விமானநிலையத்தின் கன்வேயர் பெல்ட்டில் வைத்து திருட்டு நடைபெற்றதா என்பது குறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என மும் விமான நிலையத்தில் ஊழியர்களிடமும் விசாரிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஒரு மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரியிடமே கைவரிசையை காட்டியது யார் என தெரியாமல் காவல்துறையினர் புலம்பி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்தவருக்கு 45 நாட்கள் சிறை தண்டனை

News Editor

அனைத்து மாநில முதல்வர்களுடனும் வருகின்ற 11-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை:

naveen santhakumar

Ставки На Спорт В России На Sports Ru: Список Лучших Букмекеров России, Последние Новости, Актуальные Прогнозы На Спортивные Матч

Shobika