இந்தியா

ஆந்திர மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு ஹோட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜயவாடா:-

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்ட ஹோட்டலில் தீ விபத்து  ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சுவர்ண பேலஸ்  என்ற ஹோட்டலில் கொரோனா நோயாளிகள் சிலர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர் இந்நிலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பாக கிருஷ்ணா மாவட்ட துணை ஆணையர் முஹம்மத் இம்தியாஸ் கூறுகையில்:-

இந்த ஹோட்டலில் அதிகாலை 5 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை ஒன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த ஹோட்டலை வாடகைக்கு எடுத்துள்ளது. இந்த ஹோட்டலில் மொத்தம் 22 பேர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். லிப்ட் விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர் 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர் முதற்கட்ட விசாரணையில் மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது என மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

ALSO READ  இந்தியாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு..!

இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே நவ்ரங்புரா பகுதியில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஹோட்டலில் மொத்தம் 49 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் நான்காவது தளத்தில் உள்ள ஐசியு வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய இளம் செஸ் வீரர் பிரக்னானந்தா…!

naveen santhakumar

5 லட்சம் இலவச விசா – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

naveen santhakumar

75 வது சுதந்திர தினம்- அசத்திய காஷ்மீர் இளைஞர்கள்

naveen santhakumar