இந்தியா

ரோடுரோலர் மூலம் ரூ .72 லட்சம் மதிப்புள்ள மதுபானத்தை அழித்த ஆந்திர அரசு… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜயவாடா:-

72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை ரோடு ரோலர் (RoadRoller) மூலம் ஆந்திர அரசு அழித்துள்ளது.

ஆந்திராவில் தற்பொழுது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது அங்கே பயன்படுத்திக்கொண்டு பக்கத்து மாநிலங்களிலிருந்து மதுபானங்கள் கடத்தி வரப்படுகிறது. அதன்படி தெலுங்கானாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 14,000 மேற்பட்ட மதுபான பாட்டில்கள் கைப்பற்றிய போலீசார் மசூலிப்பட்டினம் (Machilipatnam) நகரில் ரோடுரோலர் மூலமாக ஏற்றி அழித்தனர். இந்த பாட்டில்களை மொத்தமாக 3207 லிட்டர் மது பானம் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா; ஊரடங்கை நீட்டித்த மாநில அரசு !
courtesy.

இது தொடர்பாக கிருஷ்ணா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவிந்திரபாபு கூறுகையில்:-

ஆந்திரா தெலுங்கானா மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் சிறப்பு அமலாக்க பிரிவு (மது மற்றும் மணல்) போலீசார் (Special Enforcement Bureau) மேற்கொண்ட தீவிர சோதனைகளில் இந்த மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக 312 வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றார். 

ALSO READ  பஸ் வர்ற மாதிரி தெரியல..அதான் நானே எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்….

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மது, மணல் கடத்தல் மற்றும் பறிமுதல் 300 முதல் 400 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin Up Bet Overview 2023: Comprehensive Betting Guide, Deposits, And Withdrawal

Shobika

Букмекерская Контора Mostbet: Лучшие Коэффициенты И Опыт Ставок В Реальном времени Онлай

Shobika

நாய் இறைச்சி விற்பனை செய்வதற்கு அனுமதி :

naveen santhakumar