இந்தியா

“மோடி ஜிந்தாபாத்”; “ஜெய் ஸ்ரீராம்” கூற மறுத்த ஆட்டோ ஓட்டுனருக்கு அடி உதை… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெய்ப்பூர்:-

ராஜஸ்தானில் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் மோடி ஜிந்தாபாத் என்ற கோஷங்களை கூற மறுத்த வயதான ஆட்டோ ஓட்டுநரை அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கப்பார் அஹமத் கச்சாவா (Gapphar Ahmad Kacchawa) (52). சவாரி ஒன்றிற்காக அருகிலுள்ள கிராமம் ஒன்றிற்கு சென்றுள்ளார் கப்பார் சவாரி முடிந்து சிகார் நோக்கி திரும்பி வரும்பொழுது காரில் வந்த இரண்டு பேர் அவரை நிறுத்தி அவரிடம் புகையிலை கேட்டுள்ளனர் அவர் அளித்த புகையிலையை வாங்க மறுத்துவிட்டனர் அவர்கள் கப்பா அரை மூடி ஜிந்தாபாத் மற்றும் ஜெய் ஸ்ரீராம் என்று கூற சொல்லியுள்ளனர் அதற்கு கப்பார் மறுத்துள்ளார் உடனே கப்பார் கன்னத்தில் பலமாக அறிந்துள்ளனர் அவரது தாடி பிடித்து இழுத்து அவரை தாக்கியுள்ளனர் அவர்களின் தாக்குதலில் கஅபாவின் இரண்டு மூன்று பற்கள் உடைந்து உள்ளது மேலும் அவரது வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு வீங்கி போய் உள்ளது.

ALSO READ  அமெரிக்காவில் நிகழ்ந்தது போல ராஜஸ்தானில் 'மாஸ்க்' அணியாததால், கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்!

ஒரு குச்சி ஒன்றை கொண்டு அவரது தலையிலும் கழுத்திலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் ஒன்றையும் அவரது பாக்கெட்டில் வைத்திருந்த 700 ரூபாய் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு சென்று விட்டனர். இதுதொடர்பாக கப்பார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து அவர்கள் மீது எப்ஐஆர் பதித்துள்ளனர்.

இதுகுறித்து கப்பார் கூறுகையில்:-

அவர்கள் இருவரும் என்னை மூடி ஜிந்தாபாத் மற்றும் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட சொன்னார்கள் ஆனால் நான் மறுத்ததால் எனது கன்னத்தில் பலமாக அறிந்தார்கள் உடனே நான் எனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு சிகரம் நோக்கி புறப்பட்டேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து வந்து ஜக்மல்புரா அருகே என்னை வழிமறித்து தாக்கினார்கள். அவர்களில் ஒருவர் எனது தடியை பிடித்து இழுத்து தாக்கினார்  அவர் என் முகத்தில் தாக்கியதில் எனது பற்கள் உடைந்து விட்டது மேலும் என்னை சரமாரியாக உதைத்தனர். மேலும் என்னிடம் இருந்து கை கடிகாரம் மற்றும் பணத்தை பிடுங்கிக் கொண்டு சென்றனர் என்றார்.

ALSO READ  செல்பியால் விபரீதம்…. ராஜஸ்தான் அரண்மனையில் 18 பேர் உயிரிழப்பு..!

இந்த சம்பவம் தொடர்பாக சதார் காவல் நிலைய அதிகாரி புஷ்பேந்திர சிங் கூறுகையில்:-

கப்பார் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் அவரைத் தாக்கிய ராஜேந்திரன் ஜாட் 30 மற்றும் ஷம்பு தயால் ஜாட் 35 ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் மீது ஐபிசி செக்சன் 323, 341, 295A, 504, 506, 327, 382 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கர்நாடக மாநிலத்தில்  வெடி விபத்து; பிரதமர் மோடி வேதனை..!

News Editor

Mostbet UZ Узбекистан букмекер, казино, приложени

Shobika

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை- பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அதிரடி… 

naveen santhakumar