இந்தியா

அயோத்தி ராமர் கோயில் அடியில் 2000 அடி ஆழத்தில் டைம் காப்ஸ்யூல்கள்- ராம ஜென்மபூமி அறக்கட்டளை… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அயோத்தி:-

ராமர் கோயில் அடியில் 2000 அடி ஆழத்தில் காப்ஸ்யூல்கள் வைக்கப்படும் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரம் அறக்கட்டளை (Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust) கூறியுள்ளது.

டைம் காப்ஸ்யூல்கள் (Time Capsules) என்பது எதிர்காலத்தில் ஒன்றை பற்றி அறிந்து கொள்வதற்காக தற்போது அதுகுறித்த தகவல்களை ஒரு பெரிய குடுவைக்குள் வைத்து பூமிக்கடியில் புதைக்கப்படும்.

ALSO READ  ராமர் இந்தியர் அல்ல; அவர் ஒரு நேபாளி- கே.பி.ஒலி புதிய சர்ச்சை... 

இதுகுறித்து ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரம் அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சௌபால் (Kameshwar Chaupal) கூறுகையில்:-

அயோத்தியின் கட்டப்படும் ராமர் கோயிலின் அடியில் 2000 அடி ஆழத்தில் இந்த டைம் கேப்சூல் புதைக்கப்படும் இதன்மூலமாக எதிர்காலத்தில் இந்த தளத்தை பற்றி அறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த டைம் காப்ஸ்யூல்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.

ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ராம ஜென்ம பூமியில் வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 5ம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்த பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பூமி பூஜை அன்று 40 கிலோ வெள்ளியில் செய்யப்பட்ட செங்கல் பூமியில் புதைக்கப்பட்ட பூமி பூஜை தொடங்க உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet AZ mobil proqramını yükləyin Mostbet Azerbaija

Shobika

அதிகரிக்கும் கொரோனா; முழு ஊரடங்கை அமல்படுத்திய ஆந்திர அரசு ! 

News Editor

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை! 

naveen santhakumar