சினிமா

விஜய் சேதுபதி ‘அந்தாலஜி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா காலத்தில் பல்வேறு அந்தாலஜி  படங்கள் இயக்கப்பட்டு வெளியிடப்பட்டது.  அதில் இயக்குனர் வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா ஆகிய நான்கு பேர் இயக்கத்தில் அந்தாலஜி படமாக பாவக்கதைகள்  உருவாகியிருந்தது. இந்த படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது.

அதனையடுத்து மக்கள் மத்தியில் அந்தாலஜி  படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது. இந்நிலையில்தான் “குட்டி ஸ்டோரி” என்ற அந்தாலஜி படமாக  காதலை மையப்படுத்தி நான்கு கதைகள் இயக்கப்பட்டுள்ளது. இதில் கௌதம் மேனன், வருண், விஜய் சேதுபதி, அமலா பால், சாக்ஷி அகர்வால், மேகா ஆகாஷ், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கெளதம் மேனன், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி மற்றும் விஜய் உள்ளிட்டோர்கள் இயக்கியுள்ள இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘குட்டி ஸ்டோரி’ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் “குட்டி ஸ்டோரி” படம் பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

ALSO READ  மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

#vijaysethupathi #kuttistory #gauthammenon #athithipalan #tamilmovie #anthalaji #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடக்கடவுளே இவருக்குமா?… கீர்த்தி சுரேஷ் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்!

naveen santhakumar

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அருண்விஜய் :

naveen santhakumar

நெற்றிக்கண் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor