இந்தியா

லடாக் எல்லை பகுதியில் புல்டோசர்களை கொண்டு கால்வான் ஆற்றின் ஓட்டத்தை மாற்றும் சீனா- செயற்கைகோள் படங்கள்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லடாக்:-

இந்தியா- சீனா மோதல் நடந்த இடத்தில் சீனர்கள் புல்டோசர்களை கொண்டு கல்வான் ஆற்றின் ஓட்டத்தை மாற்றி வருகின்றதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

இந்திய மற்றும் சீன வீரர்களுக்கிடையில் நடந்த பயங்கர மோதல் நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள வடகிழக்கு லடாக்கில் கல்வான் ஆற்றின் ஓட்டத்தைத் தடுக்க அல்லது மாற்றி அமைக்க சீனா புல்டோசர்களை கொண்டு முயற்சிகளை மேற்கொள்ளும் ஹை-ரெசலியூஷன் செயற்கைகோள் புகைப்படங்கள் என்டிடிவி செய்தி ஊடகத்திற்கு கிடைத்துள்ளன. 

இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 அன்று மிகப்பெரிய மோதல் நடந்து உள்ளது. நமது தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.

சில வீரர்கள் கல்வான்  ஆற்றில் விழுந்து உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நதி உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கும்போது அது வறண்டு ஓடிக்கொண்டு இருப்பதை செயற்கை கோள்படங்கள் காட்டுகின்றன.

ALSO READ  தேசிய கைத்தறி நாள்...

கல்வான் பள்ளத்தாக்கில் சீன பகுதியில் சீன புல்டோசர்கள் செயல்பாட்டில் உள்ளதை படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. புல்டோசர்கள் காணப்படும் இடத்திலேயே ஆற்றின் ஓட்டம் மாறுகிறது – நீல நீரைப் பாய்ச்சுவதிலிருந்து ஒரு சிறிய, சேற்று நீரோடை வரை, அது சிறிது தூரத்தில் எல்லைகட்டுப்பாட்டு கோட்டியில் இந்தியப் பக்கத்தைக் கடக்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டின்  கிலோமீட்டருக்குள் கால்வான் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ லாரிகள் பெரும்பாலும் வறண்ட கல்வான் நதி படுக்கையில் நிறுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த படங்கள் இந்த அறிக்கையில் சேர்க்கப்படவில்லை.

ALSO READ  ஐஸ்வர்யாராய்க்கும் அவரது மகள் ஆராத்யாக்கும் கொரோனா தொற்று…. 

இதனிடையே கல்வான் பள்ளத்தாக்கினுள் இந்த கால்வான் நதி தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதாக இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் கணிசமான இந்திய இராணுவம் கட்டமைக்கப்படுவதை  காட்டவில்லை என்றாலும், எல்லை கோட்டின் பக்கத்தில் கல்வான் ஆற்றின் கரையில் லாரிகள், இராணுவ போக்குவரத்து மற்றும் புல்டோசர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சீன வாகனங்களை படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. சீன மோட்டார் சைக்கிள்கள் 5 கிலோமீட்டருக்கும் அதிகமாக நீண்டுள்ளது.

இப்பகுதியில் நூற்றுக்காணக்கான கூடாரங்களை ஏற்படுத்தியுள்ளதையும் இந்த செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகில் தலை சிறந்த விஞ்ஞானிகளில் 100 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் : ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆய்வில் தகவல்

News Editor

Официальный сайт Мостбет Ставки на спорт Mostbe

Shobika

100 கோடி தடுப்பூசி – இந்தியா புதிய சாதனை!

naveen santhakumar