இந்தியா

கொரோனா நோயாளியிடமிருந்து மொபைலை திருடிய நபர் தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கௌஹாத்தி:-

அசாம் மாநிலம் சிராங் (Chirang) மாவட்டத்தில் கஜால்கோன் (Kajalgoan) நகரில் உள்ள JSSB மருத்துவமனையில் கொரோனா தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கோரோனா நோயாளி ஒருவரிடமிருந்து ஸ்மார்ட்போனை திருடிய 22 வயது நபர் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பப்பு பர்மன் என்பவர் JSSB மருத்துவமனையில் உள்ள கொரோனா தனிமை வார்டில் நள்ளிரவு 1 மணியளவில் நுழைந்து அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா நோயாளி ஒருவரின் ஸ்மார்ட்போனை திருடியுள்ளார்.  JSSB மருத்துவமனையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் பெங்டல் (Bengtal) அருகே பப்பு பருமன் வீட்டிலிருந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். பப்பு பர்மனின் துணி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

ALSO READ  ஸ்க்ரப் டைபஸ்- இந்தியாவை மிரட்டும் புது வைரஸ்…! 

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை சூப்ரிண்டன்ட் மனோஜ் தாஸ் கூறுகையில்:-

கொரோனா தனிமை வார்டுக்குள் நுழைவதற்கு யாருக்கும் அவ்வளவு தைரியம் வராது. ஆனால் தற்போது கொரோனா நோயாளி ஒருவரின் அறைக்குள் நுழைந்து அவரிடம் இருந்து செல்போனை திருடி என சம்பவம் உண்மையில் அதிர்ச்சியாக உள்ளது என்றார். மேலும் அந்த கொரோனா நோயாளி தற்பொழுது ஆக்டிவ் கட்டத்தில் உள்ளார். எனவே அந்த பப்பு பர்மனின் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த ஸ்மார்ட்போனில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் எனவேதான் இந்த முன்னேற்பாடுகள். மேலும் இவரை கைது செய்த போலீசார் தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

ALSO READ  Pin Up Azərbaycanın ən yaxşı kazinosu Rəsmi sayt Real pulla oynayı

இந்த சம்பவம் குறித்து சிராங் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுதாகர் சிங் கூறுகையில்:-

மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலமாக இந்த ஸ்மார்ட்போனை திருடியது பப்பு பர்மன் தான் என்பதை கண்டறிந்து அவரது வீட்டு அருகில் வைத்து அவரை கைது செய்தோம். இதையடுத்து உடனடியாக சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தோம். மேலும் பப்பு பர்மனின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பப்புவை கைது செய்த போலீசார் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கர்ப்பிணித் தாயை தூக்கிச்சென்ற 100 ராணுவ வீரர்கள்

Admin

பிரபல நடிகர் திடீர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்….

naveen santhakumar

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 11 பேர் பலி…8 பேர் படுகாயம்…

Shobika