இந்தியா

50 லட்சம் ரூபாய் ஹார்லி டேவிட்சன் பைக்கில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாக்பூர்:-

இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி SA போப்டே (SA Bobde) ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்து இயக்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

64 வயதாகும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி SA போப்டே மோட்டர் பைக்குகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். முன்பு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் பைக்கை தான் வைத்திருந்ததாகவும், தனக்கு பைக் பயணம் மிகவும் பிடித்தது என்று அடிக்கடி கூறுவார். 

இந்நிலையில் தனது சொந்த ஊரான நாக்பூரில் நீதிபதி SA போப்டே டீசர்ட் மற்றும் ஸ்னீக்கர்ஸ் அணிந்துகொண்டு ஹார்லி டேவிட்ஸன் நிறுவனத்தின் லிமிட்டட் மோட்டார் பைக்கான CVO 2020 மோட்டார் பைக் மீது அமர்ந்து இயக்கியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த ஹார்லி டேவிட்சன் CVO 2020 பைக் ஆனது 2000 சிசி V-Twin எஞ்சினை கொண்டுள்ளது. இந்த பைக்கின் எடை 400 கிலோ ஆகும் இதன் விலை 51 லட்சத்திற்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. கடந்த வருடம் இதே போன்று ஹார்லி டேவிட்சன் பைக்கில் டெஸ்ட் டிரைவிங் (Test Driving) செய்த போது கீழே விழுந்து தனது கணுக்காலை உடைத்துக் கொண்டார் நீதிபதி போப்டே. இதனால் சிறிது காலம் நீதிமன்றப் பணிகள் மற்றும் கொலிஜியம் பணிகளில் இருந்து விலகியிருந்தார்.

ALSO READ  தொடரும் போராட்டம்; வேளாண் மசோதாக்களை எரித்து ஹோலி கொண்டாடிய விவசாயிகள் !

இதனிடையே இந்த ஹார்லி டேவிட்சன் பைக் நீதிபதி போப்டே-க்கு சொந்தமானது இல்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட பலரும் நீதிபதி போப்டேவை பாராட்டி வருகிறார்கள்.

ஆனால் இந்த புகைப்படங்களில் நீதிபதி போப்டே முகக் கவசம் அணியாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இவ்வாறு முகக்கவசங்கள் அணியாமல் இருக்கலாமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி இன்று முதல் துவக்கம் !

News Editor

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவு..!

naveen santhakumar

Букмекерские Конторы Без Паспорта И Нелегальные Бк Без Цупис Для Ставок На Спор

Shobika