இந்தியா

இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், வெளவால்களுக்கு கொரோனா தொற்று…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில், இரண்டு வெவ்வேறு வகையான வெளவால்களுக்கு கொரோனா தொற்று இருப்பது, கண்டறியப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (Indian Council of Medical Research (ICMR)) தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து கொரோனா உலகம் முழுவதும் பரவியது.  இந்த வைரஸ் குதிரைலாட (HorseShoe) வவ்வால்கள் மூலம் பரவியதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள வவ்வால்களில் கொரோனா வைரஸ் உள்ளதா என சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, கர்நாடகா, குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், வெளவால்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

ALSO READ  பிரிட்ஜின் பின்னால் ஒளிந்த குழந்தை- மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...

இதில் Indian Flying Fox மற்றும் Rousettus (பழந்திண்ணி வவ்வால்) ஆகிய இரு வவ்வால் இனங்களில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

Indian Flying Fox
Rousettus

இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் இமாச்சல பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வெளவால்களுக்கு, கொரோனா தொற்று இருப்பதை கண்டறிந்திருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் கர்நாடகா, சண்டிகர், பஞ்சாப், குஜராத், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வவ்வால்களுக்கு கொரோனா இல்லை. 

ALSO READ  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வின் மனைவிக்கு கொரோனா தொற்று.....

கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டும் தாக்கும் வைரஸ் அல்ல இவை வீட்டு விலங்குகளான கோழி, நாய், பூனை மற்றும் வவ்வால்களையும் தாக்கக்கூடியது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

21 நாள் ஊரடங்கை கிராமத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக மாற்றிய மகாராஷ்டிர தம்பதி…

naveen santhakumar

ஜம்மு-காஷ்மீரின் முதல் IAS அதிகாரி பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது.

naveen santhakumar

பூதாகரமாக வெடிக்கும் லட்சத்தீவு விவகாரம்; முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது கேரளா 

News Editor