இந்தியா

கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று உருவாகக்கூடும்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று உருவாகக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டிட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா நோய்த்தொற்று உலகில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தடுப்பூசி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றால், தற்போது உலகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதால் கொரோனா பெருந்தொற்றை உலக சுகாதார அவசரநிலையில் இருந்து நீக்குவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டிட்ரோஸ் அதானோம் கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று விரைவில் உருவாகும் எனவும் கொரோனா பெருந்தொற்று உலக சுகாதார அவசர நிலையில் இருந்துதான் நீக்கப்பட்டிருக்கிறது தவிர இன்னமும் மனித குலத்துக்கான அச்சுறுத்தல் என்ற நிலையில் இருந்து நீக்கப்படவில்லை என்றார்.

மேலும், கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று விரைவில் உருவாகக்கூடும் என்று கூறிய டிட்ரோஸ் அதானோம் அதனை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Share
ALSO READ  குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை???
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏழைகளுக்கு 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒன்றிய அரசு ஒப்புதல்

News Editor

சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் லட்சக்கணக்கில் கொள்ளை

Admin

வாரம் 3 முட்டை புதுச்சேரி ஆளுநர் உத்தரவு !

News Editor