அரசியல் ஆல்பம் இந்தியா உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா தமிழகம் தொழில்நுட்பம் மருத்துவம் லைஃப் ஸ்டைல் வணிகம் விளையாட்டு வேலைவாய்ப்பு ஜோதிடம்

சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் லட்சக்கணக்கில் கொள்ளை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் லட்சக்கணக்கில் கொள்ளை அடித்து தப்பி ஓடிய ஆசாமிகளை தரமணி தனிப்படை போலிசார் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர்

சென்னை தரமணி எம்.ஜி.ஆர் சாலையில் ராஜா மொய்தீன்(43) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

03.10.2019 காலை ராஜா மொய்தீன் குடும்பத்துடன் கோவளம் சென்று மாலை வீடு திரும்பி போது வீட்டில் பீரோ கதவு திறந்து இருந்ததை பார்த்துள்ளனர். 

அப்போது பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 லட்சத்திற்க்கும் மேலான பணமும் நகையும் காணாமல் போனது தெரியவந்தது. 

பின்னர் இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள தரமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தரமணி குற்றப்பிரிவு ஆய்வாளர் இசைக்கி பாண்டியன் தலைமையிலான போலீசார் வீட்டின் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ALSO READ  நீதி மய்யம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு:

இதனை அடுத்து அடையாளர் துணை ஆணையாளர் பகலவன் உத்தரவின் பேரில் தரமணி சரகர் ரவி மேற்பார்வையில் ஜெ6 ஆயவாளர் ராஜேந்திரன் மற்றும் ஜெ13 தரமணி குற்றப்பிரிவு ஆய்வாளர் இசக்கி பாண்டியன் தலைமையில் உதவி ஆயவாளர் ஜோதி பிரகாஷ் மற்றும் செந்தில்குமார், ரமேஷ் உடன் தனிப்படையினர் கண்கானிப்பு கேமராக்கள் உதவியோடு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ராஜா மொய்தீனிடம் பணிபுரிந்து வந்த சையது(21) சில சின்ன சின்ன திருட்டுகளின் காரணமாக 3 மாதம் மூன்று வேலையில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது.

சிசிடிவி காட்சியில் உள்ள உருவமானது சையதோடு ஒத்துபோன நிலையில் சையதை தேடி வந்தனர்.

ALSO READ  தூர்தர்ஷன் தவிர மற்ற சேனல்களுக்கு அதிரடி தடை… 

பின்னர் விழுப்புரம் மாவட்டம் திருக்கனூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விழுப்புரம் விரைந்த தரமணி காவல் நிலைய தனிப்படையினர் சைதயது, சையதின் தம்பி முகமது அப்துல்லா(18) மற்றும் அப்புல்லாவின் நண்பன் முகமது ஆசிப்(17) ஆகியோரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயினை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் சையது வீட்டில் யாரும் இல்லாத நேரம் அறிந்து தம்பி அப்துல்லா மற்றும் தம்பியின் நண்பனான ஆசிப்பின் உதவியோடு பணத்தை கொள்ளையடித்து விட்டு விழுப்பிரத்தில் பதுங்கியதாக தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் மூவர் மீதும் 380 ஐபிசியின் கீழ் வழக்கு பதிவு செய்த போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்ரபடுத்தி சிறையில் அடைத்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் :

naveen santhakumar

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகருக்கு கால் துண்டிப்பு…

naveen santhakumar

சுந்தர் பிச்சையின் வருமானம் ரூ.2788 கோடியாக உயர வாய்ப்பு…

Admin