இந்தியா

தாலி காட்டியவுடன் மணமகன் செய்த காரியம்…அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சம்பவம்…!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:

கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தது. படித்தவர்கள் நிறைந்த மாநிலத்தில், இளம் பெண்களின் இல்லற கனவுகள் பாதியிலேயே பொய்த்து போகும் சம்பவம் தொடர்ந்து நடந்ததால், அங்கு வரதட்சணை விவகாரம் புயலை கிளப்பியது.வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு எதிராக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதமும் இருந்தார்.

திருமணம் முடிந்ததும் மணமகன் செய்த காரியம்... இன்ப அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்

இந்நிலையில், வாலிபர் ஒருவர் கேரளாவில் வரதட்சணை மறுப்பு திருமணத்தை நடத்தி காட்டினார்.ஆலப்புழா மாவட்டம் நூரநாடு என்ற இடத்தை சேர்ந்தவர் சதீஷ் (28), நாதஸ்வர இசைக்கலைஞர். இவருக்கும் ஆலப்புழாவை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுருதிக்கும் (21) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயத்தின் போது தனக்கு வரதட்சணை வேண்டாம் என சதீஷ் கூறி இருந்தார்.

ALSO READ  கேரளாவில் தொடங்கியது உள்ளாட்சி தேர்தல்:
687 Kerala Wedding Photos - Free & Royalty-Free Stock Photos from Dreamstime

இந்நிலையில் கடந்த மே மாதம் 13-ம் தேதி நடைபெற இருந்த திருமணம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போனது. 2 மாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. மணப்பெண் சுருதி தனது பெற்றோர் சீதனமாக கொடுத்த 50 பவுன் நகைகளை அணிந்து கொண்டு மணமேடைக்கு வந்தார். அப்போது மணமகன் சதீசும் அங்கு வந்தார்.அவர் மணமகள் அணிந்திருந்த நகைகளை கண்டார். பின்னர் தனது கொள்கையே வரதட்சணை வாங்க கூடாது என்பது தான் என மணமகளிடம் தெரிவித்தார். மேலும், விருப்பம் எனில் 2 வளையல்களை மட்டும் அணிந்து விட்டு மீதி நகைகளை கழற்றி பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

Ultimate Guide to Find Best Kerala Wedding Jewellery Sets Ideas • South  India Jewels

இதையடுத்து தாலி கட்டியவுடன் மணமகள் கழுத்தில் கிடந்த நகைகள் கோவில் பூசாரி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது.கட்டிய தாலியுடன் மணப்பெண் சுருதியை மனைவியாக ஏற்றுக்கொண்ட மணமகன் சதீசின் செயலை அனைவரும் பாராட்டினர். சமூக வலைதளத்திலும் இவரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Играйте В достаточно Чем 5000 лучших Бесплатных Игровых Автоматов!

Shobika

பனியில் சிக்கிக்கொண்ட ராணுவ வீரர்கள்.. தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல்….

naveen santhakumar

இஸ்ரோ அனுப்பும் விண்வெளி வீரர்களுக்கு பிரியாணி உள்பட 30 வகை உணவுகள்

Admin