இந்தியா

அச்சுறுத்தும் ஒமைக்ரான்; புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை!

Christmas celebration
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஒமைக்ரான் தொற்றால் இந்தியாவில் 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது நல்லது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒமைக்ரான் பரவலில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி முதலிடம் வகிக்கிறது. நேற்றைய நிலவரப்படி 54 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு தினங்களை கூட்டமாக கூடி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு அமைப்பு

அதேபோல், கலாசார நிகழ்வுகள் அன அனைத்து விதமான கூட்டங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாத வாடிக்கையாளர்களை அனுமதிக்கக் கூடாது என மார்க்கெட் வர்த்தக கூட்டமைப்புகளுக்கு டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சலூன் கடைகள் அடைத்து போராட்டம்:

naveen santhakumar

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்:

naveen santhakumar

Bonus 125% + 250 F

Shobika