இந்தியா

ரிசர்வ் வங்கி அதிரடி – கூகிள் பே கார்டு விவரங்களை சேமிக்க முடியாது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இனி பயனர்களின் கார்டு விவரங்களை சேமிக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Google Pay Rolls Out NFC-Based Card Payments In India - Gizbot News

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஒழுங்குமுறைகளின் படி இனி எந்தவொரு நிறுவனமும், கார்டு நெட்வொர்க்கும் வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை சேமிக்க கூடாது என்று ஜனவரி 1, 2020 ஆண்டிலே அறிவித்திருந்தது.

அதன்படி ஜனவரி 1, 2022 ஆம் ஆண்டு முதல் இந்த ஒழுங்குமுறையானது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

ALSO READ  ரெப்போ விகிதம் 75 புள்ளி குறைப்பு.. வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் தவணை கட்ட தேவையில்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு....

இதனால் கூகுள் பே செயலியில் தற்போது சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு அப்டேட் ஆகவுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் தங்களது கார்டு விவரங்களை சேமிக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

அதாவது உங்களின் கார்டு எண், முடிவடையும் தேதி போன்ற முன்னரே அளிக்கப்பட்ட விபரங்களை கொண்டு கூகுள் பே செயலியில்பணப்பரிமாற்றம் செய்ய இயலாது.

ALSO READ  அதிக வட்டியுடன் இனி செல்போனிலேயே ஃபிக்சட் டெபாசிட்- கூகுள் பே-வின் அசத்தல் அறிவிப்பு!

எனவே இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகும் உங்களின் கார்டு விவரங்கள் கூகுள் பே செயலியில் ரீ-என்டர் செய்ய வேண்டும். அதாவது 2021 ஆண்டு தொடங்கியதும் அந்த கார்டு விவரங்களை ஒரு முறையாவது பதிவிட்டு ஏதாவது பரிமாற்றம் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் உங்களின் கார்டு விவரங்கள் கூகுள் பே செயலியில் தோன்றாது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று வெளியாகிறது ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் :

Shobika

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி

News Editor

Mostbet Kz Онлайн Казино Ресми Сайты Слоттар + Two Hundred And Fifty Fs Мостбет Кз Официальный Сайт

Shobika