இந்தியா

இனி சாமி கும்பிட்டா தான் திருப்பதியில் லட்டு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் இலவச லட்டு முறையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதியில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் லட்டுக்கான டோக்கன் வழங்கப்படுகிறது.

ஆனால் இதில் சிலர் சாமி தரிசனம் செய்யாமல், வெளியில் உள்ள லட்டு கவுண்டர்களில் லட்டை பெற்றுக்கொண்டு, வெளியில் விற்பதாக தேவஸ்தானத்திற்கு தொடர் புகார்கள் வந்தது. இதனையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

ALSO READ  கோவையை மிரட்டும் கொரோனா !

அதன்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள யானைகேட் என்ற இடத்தில் இந்த டோக்கனை முதல் தடவை ஸ்கேன் செய்யப்பட்டு, சாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக 2வது முறை ஸ்கேன் செய்யப்பட்டால் மட்டுமே இலவச லட்டு கிடைக்கும் என்ற புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்மூலம் லட்டு வெளிச்சந்தையில் விற்கப்படுவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் பிரதமர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத மம்தா !

News Editor

Kasyno I Książka Sportowa W Polsce ᐈ Oficjalna Stron

Shobika

‘துல்லிய தாக்குதல் ஹீரோ’- விமானப்படை கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

naveen santhakumar