இந்தியா

காரைக்கால் – இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் – மத்திய இணை அமைச்சர் தகவல்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காரைக்கால் – இலங்கையின் யாழ்பாணம் (Jaffna) இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா தெரிவித்தார்.

புதுச்சேரியில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

காரைக்கால்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்தும் அதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த தலைமை செயலர் தலைமையில் 2 செயலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. அவர்களது பரிந்துரையின் பேரில் கப்பல் போக்குவரத்து குறித்து விரைந்து முடிவு செய்யப்படும். இந்த திட்டம் தனியார் பங்களிப்புடன் மத்திய-மாநில அரசுகளின் ஆதரவோடு செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ  தெலுங்கானாவில் பட்டாசு விற்க,வெடிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியது:

புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில்:-

இந்த கப்பல் பயணத்தின் மூலம் 56 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ள இலங்கையை 3 மணி நேரத்தில் அடையலாம் என்றும் இதற்கு கட்டணமாக 6500 முதல் 7000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும்
என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முலாயம் சிங் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு..

Shanthi

மருத்துவக் கலந்தாய்விற்கு புதிய நடைமுறை அறிமுகம்..

Shanthi

உரிமைப் போராளி மேதா பட்கர் பிறந்த தினம்

News Editor