இந்தியா

கொரோனா வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது : மத்திய அரசு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரிட்டனில்  பரவிவரும் புதிய வகை  கொரோனா வைரஸ், முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமாதாக இருந்தது. 70 சதவீதம் வேகமாக பரவும் புதிய கொரோன வைரசால்  பிரிட்டனில்   மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள்  பிரிட்டனுக்கு   விமானப் போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.  



இந்த நிலையில்தான் பிரிட்டனில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

அதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் பிரிட்டனுக்கான விமான போக்குவரத்தை நிறுத்தியது மதியமைச்சகம். இந்தத் தடை அனைத்து வகையான விமானங்களுக்கும் பொருந்தும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் இன்று (22/12/2020) இரவு வரை, இந்தியா வரும் இங்கிலாந்து பயணிகளுக்குக் கட்டாயம் ஆர்.டி.-பி.சி.ஆர். கரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் ராகுல்காந்தி


இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பிரிட்டனில் இருந்து நவம்பர் 25- ஆம் தேதி முதல் டிசம்பர் 23- ஆம் தேதி வரை, இந்தியா வந்தவர்களைக் கண்காணிக்க வேண்டும். பிரிட்டனில் இருந்துவந்த பயணிகளின் சளி மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்.

கொரோனா  பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என முடிவுவந்தால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.கொரோனா உறுதியானால் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“இந்திய அரசே! பாலங்களை நிறுவுங்கள்…சுவர்களை அல்ல” பாஜகவை விமர்சிக்கும் ராகுல் !  

News Editor

Бк Mostbet: Скачать На Любое Устройство Как Скачать Mostbet Приложени

Shobika

முதல்வரின் முன்னிலையில் தாக்கிக்கொண்ட அதிகாரிகள்…!

News Editor