தமிழகம்

ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தது : தமிழக அரசு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் 2021- ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து, பின்னர் அதன் கட்டுப்பாடுகளையும் வெளியிட்டது தமிழக அரசு.

  
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் 2021-ல் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் 300 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 300 மாடுபிடி வீரர்கள், 50% பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தலாம்.

எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்கள் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும். மாடுபிடி வீரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் ‘கரோனா இல்லை’ எனச் சான்று பெற்றிருக்க வேண்டும். பார்வையாளர்களாகப் பங்கேற்பவர்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Share
ALSO READ  பால் தினகரனுக்கு சம்மன்.....கணக்கில் வராத முதலீடுகள் கண்டுபிடிப்பு......
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ் !

News Editor

செப். 13 முதல் 21-ம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

News Editor

இசையமைப்பாளர் இனியவன் காலமானார்

naveen santhakumar