இந்தியா

இருளர் மக்களின் வாழ்வை வெளிச்சம் போட்டு காட்டிய ‘ஜெய்பீம்’ திரைப்படம் ஓ டி டியில் வெளியானது – நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு மழை குவிகிறது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

Suriya's 'Jai Bheem' is based on a 1993 legal battle | Tamil Movie News -  Times of India

நீதியாரசர் சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது சந்தித்த மற்றும் நடத்திய வழக்கின் உண்மை சம்பவங்களை கதை களமாக கொண்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ளது ஜெய்பீம் திரைப்படம்.

இன்று ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இருளர் மக்களின் பிரச்னை, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல், ஒடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி உள்ளிட்டவை திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Jai Bhim Review: Jai Bhim

காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போன கணவனை கண்டுபிடிக்க பழங்குடியின பெண் நடத்தும் போராட்டம் பார்வையாளர்கள் மீது பல்வேறு கேள்விகளை வீசுகின்றன. உரிமைகள் மறுக்கப்பட்டு, சட்டத்தாலயும் சக மனுசங்களாலயும் மதிக்கப்படாத இருளர் மற்றும் குறவர் இனமக்களின் அழுகுரலை மிகவும் அழுத்தமாகவும் பதிவு செத்துள்ளார் இயக்குனர் ஞானவேல்.

ஜெய்பீம் திரைப்படத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்படும் நபருக்காக நியாயம் கேட்கும் வழக்கறிஞராக வந்து வாழ்கிறார் நடிகர் சூர்யா. இருளர் மக்களின் குழந்தைகளை தனது அகரம் அறக்கட்டளை மூலம் படிக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  "டெடி" படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
Jai Bhim Movie Review: Suriya's Legal Drama Is Bold, Hard-Hitting And  Powerful! | Jai Bhim Review | Jai Bhim Review And Rating - Filmibeat

‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா உள்ளிட்டோரை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். படத்தின் நினைவுகள் தமது மனதை கனமாக்கிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை அத்துமீறல்களும், பொது சமூகத்தின் கள்ள மௌனமும்... ஒளிர்கிறதா Jai  Bhim? | Suriya starrer Amazon Prime Video release Jai bhim movie review

சாதித்தரை முதல் நீதித்துறை வரை பயணிக்க வைப்பதால் ஜெய்பீம் திரைப்படம் அல்ல இந்திய வரைபடம் என விமர்சகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்கிறர்கள்.

ALSO READ  கொரானா தொற்று சூழலில் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்

அனைவரது அமோக வரவேற்பை பெற்றுள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படம், தமிழில் தலைசிறந்த படங்களில் முக்கிய இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பண்டிகை நாட்களில் கொரோனா பரவும் அபாயம் – பொதுமக்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்க ஒன்றிய அரசு உத்தரவு

News Editor

அக்.10க்குள் கலந்தாய்வு… அக்.25 முதல் வகுப்புகள் தொடக்கம் – ஏஐசிடிஇ உத்தரவு..!

naveen santhakumar

தூக்கி வீசப்படும் மாஸ்க்குகள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம்….

naveen santhakumar